சென்னை அணி பென் ஸ்டோக்ஸை வாங்கியது குறித்து கிறிஸ் கெயிலின் கருத்து; சந்தோஷத்தில் தோனி ரசிகர்கள்!
நேற்றைய தினம் 2023 இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களுக்கான வீரர்களின் ஏலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்தநிலையில், இங்கிலாந்து அணியின் நட்ச்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸை இந்திய மதிப்பில் ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி நிர்வாகம் வாங்கியிருந்தது.
சென்னை அணி ஸ்டோக்ஸை வாங்கியது தொடர்பாக அதிரடி ஆட்ட மன்னன் கிறிஸ் கெயில் கூறிய கருத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கிறிஸ் கெயிலின் கருத்து
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை வாங்கியதை நினைத்து பென் ஸ்டோக்ஸ் மிகவும் சந்தோஷப்படுவார் என முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனியின் தலைமையில் விளையாடுவதற்கு எல்லா கிரிக்கெட் வீரர்களும் விரும்புவார்கள் என்றும், அந்தவகையில் சென்னை அணியில் தோனி தலைமையில் விளையாடுவதை எண்ணி பென் ஸ்டோக்ஸ் மிகவும் மகிழ்ச்சி கொள்வார் எனவும் கெயில் கூறியுள்ளார்.
ஏனெனில் நாங்கள் அனைவரும் தோனியை விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
