ப்ளே ஓப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு - கடும் போட்டியில் மூன்று அணிகள்!
இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்தநிலையில், ப்ளே ஓப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அடுத்த சுற்றுக்குள் நுழையும் நான்கு அணிகளில் முதல் மூன்று அணிகள் உறுதியாகியுள்ள நிலையில், இறுதி அணியாக உள்நுழைவதற்கு கடுமையான போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில், இன்றைய தினம் மிக முக்கியமான கடைசி இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், இந்த இரு போட்டிகளே அடுத்த சுற்றுக்கு நுழையும் மற்றைய அணி எது என்பதை தீர்மானிக்கப் போகிறது.
போட்டி போடும் 3 அணிகள்
முதலாவது ஆட்டத்தில் மும்பை மற்றும் சன்ரைசஸ் அணியும், அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன.
பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இந்த போட்டியின் வெற்றி மிக முக்கியமானது.
இரு அணிகளும் வெற்றி பெற்றாலும், புள்ளிகள் அடிப்படையில் இரு அணிகளும் சமநிலையில் இருக்கும் என்பதோடு, ஓட்ட விகித சராசரியின் அடிப்படையிலே அடுத்த சுற்றுக்கு செல்லும் இறுதி அணி தெரிவாகும்.
ஒருவேளை, இரு அணிகளும் தோல்வி அடையுமாயின், அப்போது ஓட்ட விகித சராசரியின் அடிப்படையில் மும்பை, பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிக்கும் வாய்ப்புகள் காணப்படுகிறது.
அதேசமயம், மும்பை மற்றும் பெங்களூர் அணிகளில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றால், வெற்றி பெறும் அந்த அணி நேரடியாக தகுதிச்சுற்றுக்குள் நுழையும்.
எப்படி இருந்தாலும், அணிகளின் வெற்றியை தாண்டி அணிகளின் ஓட்ட விகித சராசரியும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்றைய இரு போட்டிகளும் மிக முக்கியமான போட்டிகளாகும்.
