அதிரடி காட்டிய சூரியகுமார் - வலுவான நிலையில் மும்பை அணி..!
சூரியகுமார் யாதவின் அபார சதத்தின் மூலம் மும்பை அணி சிறந்த ஓட்ட இலக்கை கடந்துள்ளது. ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியுள்ளது.
இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் ஆணி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இருப்பினும் முதல் இரு இடங்களில் நிறைவு செய்ய குஜராத் அணிக்கு மேலும் சில வெற்றிகள் தேவையாக உள்ளது.
219 ஓட்டங்கள்
அதேபோல் மும்பை அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்றால் மும்பை அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு உருவாகும்.
இந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 20 ஓவர் நிறைவில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதிரடியாக ஆடிய மும்பை வீரர் சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
மேலும், குஜராத் அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
