குவைத்தில் ஈரான் நடத்திய தாக்குதல் : தமிழக தமிழர் பலி
Tamil nadu
Iran
Death
Kuwait
By Sumithiran
குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் மீது இன்று(30) திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தன செல்வம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணியாற்றி வரும் அவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.
உடலைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடு
உயிரிழந்தவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், சந்தன செல்வத்தின் உடலைக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் இந்திய தூதரகம் ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்காசியப் போரில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 6 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்