அல்லாகு அக்பர் என்று அமெரிக்காவை தாக்கிய ஈரான்
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள யுத்தம் மத்திய கிழக்கிற்கு மட்டும் நின்றுவிடப்போவதில்லை என்பதனை நேற்று முன்தினம்(12) அமெரிக்காவில் நடைபெற்ற தற்கொலைத்தாக்குதல் முயற்சி கட்டியம் கூறி நிற்கிறது.
அமெரிக்காவிலுள்ள மிகவும் பிரபலமான யூத வழிபாட்டிடம் ஒன்றை நோக்கி வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனமொன்றுடன் சென்றுள்ளார் அயமட் முகமது ஹசாலி.
அந்தவேளை அங்கு 140 மாணவர்கள் இருந்துள்ளனர்.மாணவர்கள் அனைவரும் வந்தபின்னர் இந்த கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்குவதே தாக்குதலாளியின் இலக்கு.
எனினும் வாகனம் புறப்பட்டு அந்த இடத்தை நெருங்கியவேளை அங்கிருந்த காவலர்கள் வாகனத்தை மறித்தவேளை அவர்களைநோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் அயமட் முகமது ஹசாலி.
காவலர்களும் பதில் தாக்குதல் நடத்தவே வாகனத்துடன் வெடித்து கருகி மாண்டுள்ளார் அவர். இந்த சம்பவம் அமெரிக்காவின் ஆபத்தின் கனதியை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்த சம்பவம் இடம்பெற்ற அதேநாளில் அமெரிக்காவின் வேஜினியா மாநிலத்தில் முகமட் ஜொல்லா என்ற 36 வயது இளைஞன் பல்கலைக்கழகத்தில் அல்லாகு அக்பர் என கத்திக்கொண்டே துப்பாகி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.இந்த தாக்குதலில் ஒரு விரிவுரையாளர் கொல்லப்பட இரண்டு மாணவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஈரான் இரத்தப்பழி வாங்குமென ஈரான் புதிய உச்ச தலைவர் தெரிவித்த சில மணி நேரங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
இவ்வாறான பின்னணியில் மேற்குலகத்தை நோக்கி ஈரானால் அனுப்பப்பட்ட ஆபத்துக்கள் தடுக்கப்பட்டு விட்டனவா அல்லது ஆபத்துக்கள் இனி வரும் காலத்திலும் தொடருமா என்பதை விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |