கமேனியை போட்டுத் தள்ளுவோம் - கதறும் இஸ்ரேல்
முதலாம் இணைப்பு
இஸ்ரேல் வைத்தியசாலையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேலில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எங்கள் இலக்கு இஸ்ரேல் இராணுவத் தளம் மற்றும் உளவுப் பிரிவு தளம் மட்டுமே.
நாங்கள் நடத்திய தாக்குதலின் அதிர்வலைகளால் ஏற்பட்ட பாதிப்புதான் வைத்தியசாலையில் உணரப்பட்டதே தவிர, எங்களின் இலக்கு வைத்தியசாலை அல்ல என்று ஈரான் தெரிவித்துள்ளது.
உயிருடன் இருக்க அனுமதிக்க முடியாது
ஈரானின் தலைவர் அலி கமேனியை இனி உயிருடன் இருக்க அனுமதிக்க முடியாது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் சொரோகா வைத்தியசாலை சேதமடைந்ததோடு 89 பேர் காயமடைந்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீதான, ஈரானிய ஏவுகணைத் தாக்குதலின் போது சொரோகா வைத்தியசாலை (Soroka hospital) தாக்கப்பட்ட பின்னரே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
புதிய இணைப்பு
தெற்கு இஸ்ரேலின் உள்ள முக்கிய சொருகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் (Iran) பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலின் மையப்பகுதியில் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளதாக உள்ளது.
இந்நிலையிலேயே சொருகா வைத்தியாசலையில் பாலிஸ்டிக் ஏவுகணை வெடித்த பாதிப்புக்கள் மற்றும் மக்கள் பதற்றத்துடன் வெளியேறும் காட்சிககளை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வைத்தியசாலையின் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை நாங்கள் தற்போது மதிப்பிடுகிறோம்.
இந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் காசா போரில் காயமடைந்த இராணுவ வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள மனிதாபிமான முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகளின் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஈரானின் இந்த தாக்குதல் பழி தீர்ப்பதாக அமைவதாக சமூகவலைத்தளங்களில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
