ஈரான் பெரும் விலையை செலுத்தும் - சிதறும் இஸ்ரேலிய நகரங்கள் - கொதித்தெழும் இஸ்ரேலிய பிரதமர்
புதிய இணைப்பு
ஈரான் (Iran) பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தனது X பதிவில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை, இஸ்ரேலின் பீர் ஷேவாவில் உள்ள சொருகா வைத்தியசாலை மற்றும் நாட்டின் மையத்தில் உள்ள பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
הבוקר, רודני הטרור של איראן שיגרו טילים לעבר בית החולים סורוקה בבאר שבע ולעבר אוכלוסייה אזרחית במרכז הארץ.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) June 19, 2025
נגבה את מלוא המחיר מהרודנים בטהרן.
இத்தாக்குதலுக்கு ஈரான் "பெரும் விலையை" செலுத்த வேண்டியிருக்கும்.தெஹ்ரானில் உள்ளவர்களை நாங்கள் பெரும் விலையை செலுத்தச் செய்வோம்" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈரானிய (Iran) அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் (USA) இணைய வேண்டுமா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் விவாதித்துள்ளார்.
இவ்விவாதத்தின் போது எந்த முடிவும் எட்டப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க இராணுவ விமானங்கள் ஐரோப்பாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மோதலுக்கும் நேரடியாக தொடர்பு
இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும்.
இவற்றில் கேசி - 135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன.
அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை என ரியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
போர் தொடங்குகிறது
இஸ்ரேலுக்கு எதிராக சமூக ஊடக பக்கத்தில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.
به نام نامی #حیدر، نبرد آغاز میگردد
— KHAMENEI.IR | فارسی 🇮🇷 (@Khamenei_fa) June 17, 2025
علی با ذوالفقار خود، به #خیبر باز میگردد#الله_اکبر pic.twitter.com/yGYrXUDGoK
அதில் அவர், “போர் தொடங்குகிறது” என பதிவிட்டுள்ளார். "அலி கைபருக்குத் திரும்புகிறார்" (Battle of Khaybar) என்பதே அதன் பொருள்படும் என ஈரான் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் “இனி யூதர்களுக்கு இரக்கம் காட்ட முடியாது, அந்த தீவிரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை”என்று தனது எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

