அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைத் திகைக்க வைத்த ஈரானின் Cluster ஏவுகணைகள்!
ஜெருசலேம் நகரின் இதயப் பகுதியை இலக்கு வைத்து ஈரான் ஏவிய கிளஸ்டர் (Cluster) ஏவுகணைகள், வெறும் இராணுவத் தாக்குதல் மட்டுமல்ல... அது உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு அபாய எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.
வழக்கமான ஏவுகணைகளைப் போலன்றி வான்பரப்பில் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளாகச் சிதறி விழும் இந்த அதிரடித் தொழில்நுட்பம், இஸ்ரேலின் பெருமைக்குரிய அயர்ன் டோம (Iron Dome) உள்ளிட்ட அதிநவீன வான்பாதுகாப்பு வளையங்களுக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்தத் தாக்குதலின் மூலம் ஈரான் தனது இராணுவ வலிமையை நிரூபித்ததோடு மட்டுமல்லாமல் தங்களைச் சீண்டினால் அதன் விளைவுகள் எல்லைகளைத் தாண்டி எதிரொலிக்கும் என்ற அரசியல் செய்தியையும் சர்வதேச அரங்கிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைத் திகைக்க வைத்துள்ள இந்த நகர்வு, இப்பிராந்தியத்தை ஒரு முழு அளவிலான போரை நோக்கித் தள்ளுமா ? அல்லது உலக நாடுகளின் தலையீட்டால் பதற்றம் தணியுமா ? என தற்போது உலகமே உற்றுநோக்கும் மையப்புள்ளியாக இது மாறியுள்ளது.
இஸ்ரேலின் தற்போதைய கள நிலவரம் மற்றும் இந்த ஏவுகணைத் தாக்குதலின் பின்னணி குறித்த நேரடித் தகவல்களுடன் இணைகிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |