விரைவில் மத்திய கிழக்கு மோதல் முடிவுக்கு...! எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் மிக விரைவாகக் குறையும் என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரானுடன் நிலவி வரும் இராணுவ மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதால் இம்மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா மாநிலத்தின் புதிய குடியரசுக் கட்சி ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய ஆதரவாளருமான பைரன் டொனால்ட்ஸ் (Byron Donalds) இதனை தெரிவித்துள்ளார்.
முதன்மையானத் தேவை
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“எங்களது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் முதன்மையானத் தேவையாக இருப்பது எரிபொருள் விலையைக் குறைப்பதே ஆகும்.

ஈரானிய மோதல் முடிவுக்கு வருவதன் மூலம் எரிவாயு விலைகள் மிகவும் வேகமாகக் குறையும்” என தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனின் மனதிலும் எரிபொருள் (Gas) மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் (Groceries) விலை உயர்வு தொடர்பான கவலைகளே முதன்மையாக இருந்தன என்றும் அதற்குத் தீர்வுகாண்பதே புதிய நிர்வாகத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை முன்னேற்றமடைந்து வரும் சூழலில் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்து சந்தையில் நிலைத்தன்மை திரும்பும் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |