விரைவில் முடிவிற்கு வரப்போகும் ஈரான் போர் : ட்ரம்ப் நம்பிக்கை
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், "ஏதேனும் ஒரு வழியில் இந்த போர் மிக விரைவில் முடிவடையும். போர் முடிந்தவுடன் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாகக் குறையும்" என்றும் உறுதியளித்துள்ளார்.
ஈரானில் மிகக் கடுமையான பணவீக்கம்
ஈரானில் தற்போது நிலவி வரும் மிகக் கடுமையான பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவை அந்நாட்டைப் பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரான் இராணுவத்தின் முக்கிய கட்டமைப்புகள் பலவீனமடைந்துள்ளதாகக் கூறினார்.

ஈரான் அணுஆயுதத்தை பெறுவதைத் தடுப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்றும், அந்த இலக்கை அடையும் வரை நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படப்போகும் மாற்றம்
இதேவேளை போர் முடிவுக்கு வந்தவுடன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் தேங்கியுள்ள கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும், சந்தையில் எண்ணெய் விநியோகம் அதிகரித்து விலை கட்டுக்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் எரிபொருள் தேவையைச் சமாளிக்கத் தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |