ஈரான் விவகாரத்தில் மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
ஒப்பந்தம் செய்ய வேண்டிய நேரம் விரைவாக முடிவடைகிறதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து இன்று கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல், சமூக வலைதளப் பதிவில், “ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகள் மிகவும் வித்தியாசமாகவும் அசாதாரணமாகவும் உள்ளனர். அவர்கள் எங்களிடம் ஒப்பந்தம் செய்ய வேண்டி கெஞ்சுகிறார்கள்.
ஏனெனில் அவர்கள் ராணுவ ரீதியாக முற்றிலும் பலவீனமடைந்துள்ளனர். ஆனால் வெளிப்படையாக அவர்கள் எங்கள் முன்மொழிவை பரிசீலித்து வருகிறோம் என்று கூறுகிறார்கள். இது தவறு,” எனக் குறிப்பிடடுள்ளார்.
ட்ரம்பின் எச்சரிக்கை
மேலும் அவர், “அவர்கள் விரைவில் தீவிரமாக செயல்பட வேண்டும். இல்லையெனில் மிகவும் தாமதமாகிவிடும். அதற்கு பிறகு திரும்பிச் செல்ல வழியே இருக்காது; நிலைமை மோசமாகும்,” என்று எச்சரித்துள்ளார்.

இந்த கருத்துகள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ட்ரம்ப் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கூறியதையடுத்து வெளியாகியுள்ளன. இது அவரது முந்தைய கடுமையான நிலைப்பாட்டிலிருந்து மாற்றமாக பார்க்கப்படுகிறது.
சந்தேகத்தில் ஈரான் தரப்பு
இதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இடைதரகர்கள் மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருவதை ஒப்புக்கொண்டார். ஆனால் அமெரிக்காவின் அணுகுமுறைக்கு குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Image Credit: Britannica
வெள்ளை மாளிகை தரப்பில், பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், மோதலைத் தீர்க்க பாகிஸ்தானில் சந்திப்பு நடத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |