600 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு : வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன குறிப்பிட்டார்.
நுகர்வோர் விவகார அதிகார சபை
அத்துடன் பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை விலைக் குறைப்புகளுடன் இணைந்து, உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்களை விற்கும் வியாபாரிகளைக் கண்டறியும் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |