வவுனியாவில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் அதிரடிப்படையினரால் மீட்பு
வவுனியா எ9 பிரதான வீதியில் தாண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் நேற்று (25.03.2026) இரவு குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
900 லீற்றர் சுப்பர் டீசல் கைப்பற்றப்பட்டது
விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அந்தப்பகுதியில் உள்ள பிரபல வாகன திருத்தகம் ஒன்று நேற்று (25.03.2026) இரவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் சுப்பர் டீசல், 600 லீற்றர் டீசல் மற்றும் 400 லீற்றர் பெட்ரோல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட எரிபொருட்களை சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா காவல் துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிரடிப்படையினரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |