மீண்டும் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்ட சுரேஷ் சலே
உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, திடீர் சுகவீனம் காரணமாக நேற்று முன்தினம் (24) கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து மீண்டும் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உடல்நிலையைப் பரிசோதிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் முன்னர் அனுமதி கோரியிருந்தபோதிலும் அது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |