மத்திய கிழக்குப் போரில் இலங்கை: Pragmatic நடுநிலையில் அநுர - இந்திய ராஜதந்திரம்
ஈரான் போர் தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து பகிர்வுகள் மீண்டும் இந்தியா உடனான இலங்கையின் உறவை அடிகோடிட்டுள்ளது.
மேற்காசிய நிலவரம், உலக எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி சப்ளை சங்கிலி பாதிப்பு ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக விளக்கப்பட்ட நிலையில் இது பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் மிக்கதாக மாறியுள்ளது.
எனினும் இலங்கையின் இந்த நடுநிலை அணுகுமுறை, இந்தியாவின் “Neighborhood First” கொள்கையுடன் இணைந்து பிராந்திய ஸ்திரத்தன்மையை வலியுறுத்துவதாகக் கருதப்படுகிறது.
சில அரசியல் தரப்புகள் இலங்கையின் நிலைப்பாட்டை “அமெரிக்காவுக்கு சாதகமானது” அல்லது “ஈரானுக்கு எதிரானது” என்று விமர்சித்தன. ஆனால் அரசு, “நாம் நடுநிலையானவர்கள்” என்று உறுதியாக மறுப்பு தெரிவித்தது.
ஐ.நா.வில் ஈரானுக்கு எதிரான ஒருதலைப்பட்ச தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கவும் இலங்கை மறுத்தது. இலங்கைக்கும் ஈரானுக்கும் நீண்டகால பொருளாதார உறவு உள்ள நிலையில், போர் சூழலில் பொருளாதார பாதிப்புகளை குறைக்கும் வகையில் நடுநிலை கொள்கை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் ஈரான் அமெரிக்கா உடனான இலங்கை உறவுக்கு மத்தியில் இந்தியாவை இலங்கை பற்றிப்பிடிப்பதற்கான காரணத்தை விளக்குகிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |