அமெரிக்காவின் பொய்யான அறிவிப்பு! அதிரடியாக அம்பலப்படுத்திய ஈரான்
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையின் இரண்டு ஏவுகணை அழிப்பு கப்பல்கள் நுழைந்துள்ளதாக அமெரிக்க தெரிவித்த கூற்றை ஈரான் முற்றாக மறுத்துள்ளது.
"அமெரிக்கக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை அணுகியதாகவும், அதற்குள் நுழைந்ததாகவும் சென்காம் (CENTCOM) தளபதி கூறியுள்ள தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது," என்று ஈரானின் ஆயுதப்படை தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எந்தவொரு கப்பலும் நீரிணையை கடப்பதற்கான அனுமதி மற்றும் அதற்கான முன்முயற்சிகள் எடுக்கும் அதிகாரம் ஈரானிய ஆயுதப்படைகளிடமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை கண்ணிவெடிகள்
முன்னதாக, அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும், அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் நீரிணையை கடந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்காவின் இந்தக் கூற்றை ஈரான் தற்போது பகிரங்கமாக மறுத்துள்ளதால் அந்தப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |