அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ஈரான்!
பரஸ்பர மரியாதை மற்றும் நலன்களின் அடிப்படையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெஹ்ரானில் ஒரு தொலைக்காட்சி கூட்டத்தின் போது வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவிடம் இதனை தெரிவித்தார்.
எனினும், நியாயமான மற்றும் கண்ணியமான பேச்சுவார்த்தைகள், சமமான நிலையில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வன்முறை
ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து தெஹ்ரானுக்கு எதிரான தலையீட்டிற்கான சாத்தியமான இராணுவ விருப்பங்களை அவரது நிர்வாகம் எடைபோட்டு வரும் நிலையில், நேற்று (11.01.2026) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறியதைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சரின் அறிக்கைகள் வந்தன.

கடந்த மாதங்களில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேல் ஈரான் மீது பாரிய அளவிலான திடீர் தாக்குதலைத் ஆரம்பிப்பதற்கு முன்பு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
பின்னர் வாஷிங்டன் மோதலில் இணைந்து, முக்கிய அணுசக்தி தளங்களில் அதன் சொந்த தாக்குதல்களை நடத்தியது.
யுரேனியம் செறிவூட்டலை முற்றிலுமாக நிறுத்தி, அதன் ஏவுகணைத் திட்டத்தில் வரம்புகளை ஏற்க வேண்டும் என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கைகளை தெஹ்ரான் நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |