கமேனியின் மகனை நியமித்தது பெரும் தவறு! ஆட்டம் காட்டத் தொடங்கிய ட்ரம்ப்
மொஜ்தபா கமெனியை ஈரானின் உச்ச தலைவராக நியமித்தது மிகப்பெரிய தவறு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் பெரிய தவறு செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அது நீண்ட காலம் நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பும் அவர், மொஜ்தபா கமெனியை அடுத்த தலைவராக நியமிப்பது அமெரிக்காவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் அனுமதி
கடந்த மாதம் 28 ஆம் திகதி முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, 88 உறுப்பினர்களைக் கொண்ட மூத்த மதத் தலைவர்கள் அடங்கிய நிபுணர் சபையினால் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமெனி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அயதுல்லா அலி கமேனிக்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக வருபவர் அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்று ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கமேனிக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்வதில் தாமும் பங்கு பெற விரும்புவதாக ட்ரம்ப் பலமுறை கூறியிருந்த நிலையிலேயே மொஜ்தபா கமெனி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |