யுரேனியத்தை வெளியே அனுப்ப முடியாது...! திட்டவட்டமாக அறிவித்த ஈரான்
அணுசக்தி விவகாரம் குறித்தோ அல்லது தடைகளை நீக்குவது குறித்தோ தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவை இறுதி ஒப்பந்தம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
செறிவூட்டல் மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்களின் இருப்புக்கள் பற்றிய பிரச்சினை இறுதி ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செறிவூட்டப்பட்ட யுரேனியம்
நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான ஒரே வழி, அதை ஈரானிலேயே செய்வதுதான் என்பதே தெஹ்ரானின் நிலைப்பாடாக எப்போதும் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கான (செறிவூட்டப்பட்ட பொருட்கள்) தீர்வு இந்தத் திசையில்தான் இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட நாங்கள் முயற்சிக்கிறோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் பேச்சுவார்த்தைகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரை (ஒப்பந்த வரைவு) தொடர்பாக உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களிடையே ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் உள்ளதாகவும் ஆனால் இறுதி முடிவு கூட்டாகவே எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அது அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |