மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் : இலங்கை விரைகிறார் ஈரான் அதிபர்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இந்த மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது விஜயத்தின்போது உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோமீட்டர் நீர் கடத்தும் சுரங்கப்பாதையும் ஏப்ரல் 24 அன்று திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வரும் ஈரான் அதிபர்
" ஈரானிய அதிபர் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்" என இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய சேவை
உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வெளிநாடுகளில் ஈரானிய ஒப்பந்ததாரர்களால் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டங்களில் இந்தத் திட்டம் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |