ட்ரம்ப் பதவியில் இருந்து விலகும் வரை ஈரான் போரை நீட்டிக்க கூடும்: IRGC எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து விலகும் வரை அமெரிக்காவுடனான போரை ஈரான் நீட்டிக்கக்கூடும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிரி நம்மைத் தாக்கத் துணியாத அளவுக்கு நாம் தடுப்பாற்றலை அடைய வேண்டும் என்றும் அப்போதுதான் நாம் பாதுகாப்பாக வாழ முடியும் எனவும் குறித்த தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அப்போதுதான் வேறு யாராவது ஈரானைத் தாக்க நினைத்தால், அதற்கு ஒரு விலை உண்டு என்பதை அவர்கள் அறிவார்கள் எனவும் பகிரங்கமாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளிப்படுத்தியுள்ளது.
ஈரானின் கட்டுப்பாட்டில் போர்
மேலும், தற்போது போர் ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் அமேரிக்கா வியூகம் இல்லாத போரை நடத்தி வருகிறது எனவும் கூறியுள்ளனர்.

இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு அனுபவத்தை நாங்கள் பெறுகிறோம். அமெரிக்காவுடன் எப்படிப் போரிடுவது என்பதைக் கற்றுக்கொள்வதற்கான உண்மையான அனுபவத்தைப் பெற, நாங்கள் ஒரு உண்மையான போரை இதற்கு முன் சந்தித்ததில்லை.
இந்த ஐந்து மாதங்களில், நாங்கள் அதைக் கற்றுக்கொண்டோம்,என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |