ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் : இப்படி கூறுகிறார் ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணை இப்போது அமெரிக்க இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ட்ரம்ப் மேற்கண்டாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில்
"ஈரானுடனான விடயங்கள் மிகவும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கின்றன. ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது; வேறு யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.

எங்கள் கடற்படை சிறந்தது, மேலும் எங்கள் நாட்டிற்கு எல்லாம் மிகவும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது," என்று ட்ரம்ப் கூறியதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானை நம்புவதற்கு நான் கடைசி ஆள்
"நான் ஈரானை நம்பவில்லை. ஈரானை நம்புவதற்கு நான் கடைசி ஆள்; அவர்கள் என்னிடம் மீண்டும் மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார்கள். இப்போது, ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது; அவர்களிடம் இல்லை," என்று ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |