அரங்கேறும் பெரும் பேரழிவு : காசா போரை நிறுத்த இரண்டு நாடுகள் தீவிர முயற்சி
காசா மீதான போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பாக ஈரான் மற்றும் கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் முக்கியமான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த தோஹாவின் மத்தியஸ்த பலதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது.
பேரழிவுகரமான மோதலை முடிவுக்கு
ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கத்தார் வெளியுறவு அமைச்சர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி ஆகியோர் பேரழிவுகரமான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து பேசியதாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களும் சனிக்கிழமை பிற்பகுதியில் உறுதிப்படுத்தின.
ஈரானிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை
ஈரானிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "போரை நிறுத்துவதையும், அரசியல் தீர்வில் தீவிரமாக கவனம் செலுத்துவதையும் பெரும்பாலான அரசியளல்வாதிகள் வலியுறுத்தியதாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் உறுதிப்படுத்தினர் என தெரிவித்துள்ளது.
Prime Minister and Minister of Foreign Affairs @MBA_AlThani_ Receives Phone Call from Iranian Foreign Minister#MOFAQatar pic.twitter.com/vSc5ECX1u6
— Ministry of Foreign Affairs - Qatar (@MofaQatar_EN) January 27, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |