ஹோர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படாது... அமெரிக்காவிற்கு ஈரான் வைத்த செக்!
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரான் முன்வைத்த 7 நிபந்தனைகளில் சிலவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்ட போதிலும் வோஷிங்டனின் ஒட்டுமொத்த பதில் போதுமானதாக இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei)இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது தூதரக அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் போருக்கு முந்தைய பழைய நிலைமைக்கு இனி ஒருபோதும் திரும்ப முடியாது என்றும் திட்டவட்டமாக அவர் அறிவித்துள்ளார்.
தூதரக வழிகள்
பாகிஸ்தான், கதார் மற்றும் ஈராக் ஆகிய மூன்று தூதரக வழிகள் மூலம் அமெரிக்கா கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான 7 கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவை ஈரான் அமெரிக்காவிடம் வழங்கியது.

இந்திநிலையில் ஈரான் முன்வைத்த நிபந்தனைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவிற்குத் திறக்கப்படாது என்றும், நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறாது என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |