ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்: வான் வழியிலேயே சுட்டு வீழ்த்திய சவூதி படை
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தை (King Khalid International Airport) இலக்கு வைத்து ஏவப்பட்ட தாக்குதல் ஏவுகணை இடைமறிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.
சவூதி தலைமையிலான அரபு கூட்டுப் படைகளின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இதனை இடைமறித்து அழித்துள்ளது.
முன்னதாக, விமான நிலையத்தின் நான்காவது பயணிகள் முனையத்தில் (Terminal 4) அடையாளம் தெரியாத பொருள் ஒன்று விழுந்து தாக்கியதில் அங்குத் தீ விபத்து ஏற்பட்டது.
மீட்புக் குழுவினர்
இதனை தொடர்ந்து இந்த ஏவுகணை இடைமறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் 4 மீது அடையாளம் தெரியாத எறிபொருள் (Projectile) விழுந்து தாக்கியதில் அங்குத் தீ விபத்து ஏற்பட்டது.

அத்தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே விமான நிலையப் பகுதியை நோக்கியும் வான்வெளியிலும் ஏவப்பட்ட க்ரூஸ் ஏவுகணை (Cruise Missile) ஒன்றைச் சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து வான் வழியிலேயே அழித்துள்ளதாகக் கூட்டுப் படையின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி (Turki Al-Malki) உறுதிப்படுத்தியுள்ளார்.
ரியாத் விமான நிலையம் மற்றும் சவூதி வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் என ஏமனின் ஹூதி (Houthi) ஆயுதக் குழுவினர் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவூதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் பிராந்தியப் பாதுகாப்பைப் பெருமளவில் கேள்விக்குறியாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |