ஹமாஸின் பின்னணியில் வகிபாகிக்கும் ஈரானின் தந்திரோபாய நகர்வு!
இஸ்ரேலில் தற்போது மையம் கொண்டுள்ள பயங்கரமான யுத்தத்தின் பின்னணியில் ஈரான் ரஷ்யா சீனா போன்ற தேசங்களின் வியூகங்கள் இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் கூட இந்த மூன்று நாடுகளின் வகிபாகங்கள் இருக்கலாம் என சில மேற்குலக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் ரஷ்யா சீனா இந்த மூன்று நாடுகளில் ஈரானின் பங்களிப்பென்பது நேரானது.
இஸ்ரேல் என்கின்ற ஒரு நாட்டை உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டி செயற்பட்டுக்கொண்டிருக்கிறது ஈரான்.
இதற்காக ஈரான் மேற்கொண்ட தந்துரோபாய நகர்வு தான் ஹமாஸை வைத்து இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடி தாக்குதல் ஆகும்.
இவ்வாறு நாளுக்கு நாள் முறுகல் நிலையை அடையும் போரின் பின்னணியில் செயற்படும் ஈரானின் வகிபாகம் பற்றி விரிவான எடுத்துரைப்புகளுடன் வருகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி.