ஐரோப்பாவின் அமெரிக்க இலக்குகள் மீதான ஈரானின் தாக்குதல் திட்டம்! களமிறங்குகிறது நேட்டோ
ஈரானிடம் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் அனைத்து நட்பு நாடுகளையும் பாதுகாக்கவும் தயாராக இருப்பதாக நேட்டோ அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போரைத் தீவிரப்படுத்த முடிவு செய்தால், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளைத் தாக்க ஈரான் பரிசீலித்து வருவது குறித்த செய்தியை ஐரோப்பிய தப்புகள் கடந்த தினங்களில் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் நேட்டோ சிறப்பு பாதுகாப்பு கட்டமைப்பே உருவாக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவக் கூட்டணி
இது குறித்து நேட்டோ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்தியில், தமது இராணுவக் கூட்டணி எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து நட்பு நாடுகளையும் பாதுகாக்கத் தேவையானதை எப்போதும் செய்யும் என்று கூறிய குறித்த நேட்டோ அதிகாரி, எங்களின் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலைப்பாடு வலுவானதாகவும் திறம்பட்டதாகவும் உள்ளது என்றும் மேலும் விவரித்ததாக அடிகோடிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈரானிலிருந்து துருக்கியை நோக்கி வந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக இடைமறித்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டபடி, நமது தடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலைப்பாடு வலுவாகவும் திறம்படவும் உள்ளது எனவும் நேட்டோ கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |