இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு
இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே புதிய நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது
நேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietjet Air Line), தனது சேவையை ஆரம்பிக்கும் வகையில் அதன் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த விமான சேவை செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் வாரத்திற்கு 3 நாட்கள் வியட்நாமின் ஹோசிமின் நகர விமான நிலையத்திற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே இயக்கப்படவுள்ளது.
வாரத்திற்கு 3 நாட்கள்
வியட்ஜெட் விமான சேவையின் VJ-1875 என்ற இலக்கமுடைய முதலாவது கன்னி விமானம், நேற்று (18) இரவு 09.33 மணிக்கு 169 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் அந்த விமானம் 171 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் வியட்நாமின் ஹோசிமின் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
இவ்விமானத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர்த்தாரை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.
இருவரும் இலங்கையர்கள்
இந்த வருகையின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், இதன் தலைமை விமானி மற்றும் உதவி விமானி ஆகிய இருவரும் இலங்கையர்கள் ஆவர்.

பாணந்துறையைச் சேர்ந்த திவங்க சில்வா மற்றும் மொரட்டுவையைச் சேர்ந்த ரந்தீர் பெரேரா ஆகியோரே அவ்வாறு விமானத்தை இயக்கி வந்தோராவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening