இஸ்ரேலை அதிரவைத்த ஈரானின் CLUSTER பதிலடி
Iran
Israel-Iran conflict
By Dharu
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை இஸ்ரேல் படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, CLUSTER தலைப் போர்க்குண்டுகளால் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய அரசு தொலைக்காட்சியில் இன்று (18.03.2027) தாக்குதல் தொடர்பிலான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் நேற்று இரவு, அதிக மக்கள் அடர்த்தி கொண்ட டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பலி எண்ணிக்கை
இதன்மூலம், இந்தப் போரினால் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் போரின் விளைவுகள் உலகளவில் உணரப்படும் என்றும், " செல்வம், மதம், இனம் ஆகிய பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கும்" என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |