பேச்சுவாரத்தையில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ள ஈரான்
அமெரிக்கத் தூதுக்குழு பாகிஸ்தானுக்கான பயணத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நியூயார்க் போஸ்ட் பத்திரிகையிடம் தெரிவித்த போதிலும், பேச்சுவார்த்தையில் இருந்து விலகும் தனது முடிவை ஈரான் மாற்றிக்கொள்ளவில்லை என, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய, தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தஸ்னிமின் அறிக்கையின்படி, அமெரிக்கக் கடற்படை முற்றுகை ஒரு "தடையாக" நீடிக்கிறது, ஆனால், இதைத் தாண்டி, ஈரானுக்கு அமெரிக்கா அனுப்பிய செய்திகளில் "வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் வாய்ப்புகளை மங்கச் செய்யும் மேலும் அதிகப்படியான கோரிக்கைகள் உள்ளன".
கடற்படை முற்றுகை மிக அடிப்படை தடை
பேச்சுவார்த்தைகளுக்கு கடற்படை முற்றுகைப் பிரச்சினை ஒரு மிக அடிப்படையான தடையாக உள்ளது என்றும், இந்தப் பிரச்சினை பாகிஸ்தான் மத்தியஸ்தரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்தப் பிரச்சினை குறித்து ட்ரம்புடன் விவாதித்ததாக பாகிஸ்தான் மத்தியஸ்தர் இன்று கூறியுள்ளார் என்றும் தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சில அடிப்படைத் தடைகள் அகற்றப்பட்டு, தெஹ்ரானுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கையை எட்டுவதற்கான தெளிவான வாய்ப்பு உருவாகும் வரை, பேச்சு மேசையில் பங்கேற்க மாட்டாது ஈரான்.
மோதலுக்கு தயார்
"ஈரான் இராணுவ மோதலுக்கும், அமெரிக்காவை மீண்டும் தண்டிப்பதற்கும் முழுமையாகத் தயாராக உள்ளது," என்று அது தெரிவித்துள்ளது.

தஸ்னிம் தனது அறிக்கையில் எந்த அதிகாரியையும் தங்கள் ஆதாரமாகக் குறிப்பிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |