தாக்குதலில் ஒரு கால் இழப்பு : சிகிச்சைக்காக இரகசியமாக ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட மொஜ்தபா கமேனி...!
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறைந்தது ஒரு காலை இழந்து, கடுமையான கல்லீரல் பாதிப்பை சந்தித்துள்ளதாக குவைத்தின் "அல்-ஜரிடா" செய்தித்தாள் மற்றும் பிரிட்டனின் "தி சன்" செய்தித்தாள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.
அவரது காயங்களுக்கு சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சிறப்பு மருத்துவமனை தேவைப்பட்டாலும், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் ஈரானில் கமேனிக்கு சிகிச்சை பெறுவது கடினமாகிவிட்டதாக செய்தித்தாள்கள் தெரிவித்தன.
ரஷ்ய இராணுவ விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட உச்ச தலைவர்
இதன் விளைவாக, ஈரானிய உச்சதலைவர் மிகவும் ரகசியமாக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், மேலும் இதற்காக ஒரு ரஷ்ய இராணுவ விமானம் ஈரானுக்கு வந்துள்ளது என்று செய்தித்தாள்கள் தெரிவித்தன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் ஈரானிய உச்ச தலைவர் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், புடினின் அதிகாரபூர்வ இல்லத்தில் கமேனிக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.
12 ஆம் திகதி தொலைபேசி மூலம் கமேனி ரஷ்யாவில் சிகிச்சை பெறலாம் என்றும், காயமடைந்த கமேனி அன்று மதியம் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.
தந்தையார் மீதான தாக்குதலில் காயமடைந்தாரா?
ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்தாரா அல்லது வேறொரு தாக்குதலில் காயமடைந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.

ஈரானின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து மொஜ்தபா கமேனி இன்னும் பொதுவில் தோன்றாததற்கு இதுவே காரணம் என்றும் செய்தித்தாள்கள் குறிப்பிட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |