சர்ச்சைகளுக்கு மத்தியிலான ஈரான் அதிபரின் இலங்கை வருகை
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நாளை (24) இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
ஈரானின் கடன் ஆதரவு
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் 2011 இல் ஈரானின் ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியின் கடன் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் தேசிய மின் அமைப்பில் 120 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படுவதோடு குடிநீர் விநியோகம் மற்றும் விவசாய தேவைகளுக்கான நீர் விநியோகமும் இதன் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐந்து ஒப்பந்தங்கள்
அதேவேளை, ஈரான் அதிபரின் நாட்டிற்கு விஜயம் செய்வதை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு ஈரான் அதிபர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அத்தோடு, இந்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் ஈரான் ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
