அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா முன்வைத்த 15 அம்சப் பட்டியலில் பெரும்பாலும் வரம்பு மீறிய, யதார்த்தமற்ற மற்றும் நியாயமற்ற கோரிக்கைகள் இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான கோரிக்கைகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்த நிலையில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இடைத்தரகர்களால் வரும் செய்தி
அத்தோடு, தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், வொஷிங்டனிடமிருந்து வரும் செய்திகள் இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன என்றும் பாகாயி கூறியுள்ளார்.

இதேவேளை, பிராந்திய நாடுகளுடன் பாகிஸ்தான் ஏற்பாடு செய்த சமீபத்திய கூட்டங்கள் எதிலும் ஈரான் பங்கேற்கவில்லை என்றும், அவை ஈரானால் ஒப்புக்கொள்ளப்படாத ஒரு கட்டமைப்பின் வடிவத்தில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் பங்கேற்காத கூட்டம்
"பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் நடத்தும் கூட்டங்கள், அவர்களே வடிவமைத்த ஒரு கட்டமைப்பிற்குள் நடைபெறுகின்றன, மேலும் நாங்கள் இந்தக் கட்டமைப்பில் பங்கேற்கவில்லை," என்று அவர் அதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னிணியில், பாகிஸ்தான் தலைநகரில் நடைபெற்ற நான்கு நாடுகளின் கூட்டத்தைத் தொடர்ந்து, வரும் நாட்களில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் எளிதாக்கவும் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கடந்த வார இறுதியில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 5 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்