கவலைக்கிடமான நிலையில் ஈரான் உச்ச தலைவர் - விரைவில் மறைவு குறித்த செய்தி
ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜெருசலேம் போஸ்ட்டால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு வட்டாரம் "அவர் வீரமரணம் அடைந்த செய்தி விரைவில் வந்தால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்" என்று கூறியுள்ளது.
எழுத்துப்பூர்வ அறிக்கை
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு இராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் ஈரான் ஆன்மீக தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.

தந்தையின் மறைவின் பின் ஈரானிய உச்ச தலைவராக பதவியேற்றதிலிருந்து அவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை, அவரது குரல் பதிவு வெளியாகாமலும் இருக்கிறது.
ஈரானிய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வாயிலாக அவர் பெயரில் எழுதப்பட்ட அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இது சர்வதேச அளவில் அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை அதிகரிக்கச் செய்தது.
கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
90% செயலிழந்த கொமெய்னி
அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனியார் செய்தி நிறுவன நேர்காணலில், ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். மேலும் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கமேனி 90 சதவீதம் செயலிழந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் கொமெய்னி உடல்நிலை குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து ஈரான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |