திடீரென பதவி விலகிய ஷானி அபேசேகர - பின்னணியில் உள்ள காரணம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர விலகியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது ஒழுங்கு நடவடிக்கை அல்லது சர்ச்சை காரணமாக ஏற்பட்ட விலகல் அல்ல என்றும், பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளதால் CID பணிப்பாளர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி , நாளை முதல் அவர் CID பணிப்பாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஷானி அபேசேகரவுக்கு 2020 ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதி காவல்துறை மா அதிபர் பதவியை வழங்க நிர்வாக மேல்முறையீட்டு நீதிமன்றம்அ னுமதி வழங்கியுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பதவி உயர்வு காரணமாகவே CID பணிப்பாளர் பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது நிர்வாக ரீதியான நடைமுறையே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |