ட்ரம்ப் ஒரு ஆபத்தான கழிவு...! ஈரானின் நையாண்டி பதிவு - வைரலாகும் காணொளி
அமெரிக்காவில் நிலவிவரும் வாழ்க்கைச் செலவு உயர்வு, சுங்க வரிக்கான கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் ஆகியவை பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அதிருப்தியே தேர்தலில் எதிரொலித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகத் தேர்தலின் முடிவு ட்ரம்ப்பிற்கு எதிரான கடுமையான மக்கள் தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், 'ட்ரம்ப்' என்று பெயரிடப்பட்ட பொருள் ஒன்றை 'ஆபத்தான கழிவு' என்று குறிக்கப்பட்ட குப்பைத் தொட்டிக்குள் போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நையாண்டி பதிவு
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் பதற்றத்தின் மத்தியில், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக ஈரான் இந்த நையாண்டிப் பதிவை வெளியிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டையும் ஜனநாயகக் கட்சி தன்வசம் ஆக்கியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம், ட்ரம்ப்பின் இறுதி இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அவரது சட்டமூலங்களை முடக்குவதற்கும், நீதிபதி நியமனங்கள் மற்றும் மூத்த அரசாங்கப் பதவிகளுக்கான பரிந்துரைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு முழு அதிகாரம் கிடைத்துள்ளது.
மேலும், ஈரானுக்கு எதிரான போர் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவும் இந்த வெற்றி வழிவகுத்துள்ளது.
Hazardous Waste. https://t.co/Nli1gp0Qwt
— Ziga_lya_mese (@_Huza01) November 4, 2026
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |