ட்ரம்புக்கு ஈரான் அனுப்பிய எச்சரிக்கும் தொனியிலான மறைமுகச் செய்தி
அமெரிக்காவின் அச்சுறுத்தல் மற்றும் பலவந்தத்தின் கீழ் இஸ்லாமியக் குடியரசு ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது என பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரெசா அமிரி மொகாதம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவும் ஈரானும் தங்களின் கர்வம் மற்றும் தப்பெண்ணங்களுடன் போராடி, மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை எட்டத் தவறியுள்ள நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"ஒரு பெரிய நாகரிகத்தைக் கொண்டிருக்கும் ஒற்றை நாடு, அச்சுறுத்தலுக்கும் பலவந்தத்திற்கும் பணிந்து பேச்சுவார்த்தை நடத்தாது என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும்.” என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இரண்டு வார கால போர் நிறுத்தம்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், "இது ஒரு சாராம்சமான, இஸ்லாமிய மற்றும் இறையியல் கோட்பாடு. அமெரிக்கா இதை உணர்ந்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” எனவும் கூறியுள்ளார்.

ஈரானுடனான நிலையற்ற இரண்டு வார கால போர் நிறுத்தம், எந்தவொரு முன்னேற்றமும் இன்றி செவ்வாய்க்கிழமை முடிவடைந்தால், ஏராளமான குண்டுவெடிப்புகள் தொடங்கும் என்று அமெரிக்கா அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வார இறுதியில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே ஈரான் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஈரான் அச்சுறுத்தியபோதிலும், பாகிஸ்தானில் ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் குறிப்பிடத்தக்க தடைகளும் நிச்சயமற்ற தன்மையும் நீடிப்பதால், ஈரான் இதில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எண்ணெய் விலை உயர்வுகளையும் பங்குச் சந்தை அதிர்ச்சிகளையும் தடுக்கும் ஒரு ஒப்பந்தத்தை ட்ரம்ப் விரும்புவதாகவும், ஆனால் அணு ஆயுதத்தை உருவாக்கும் வழிமுறைகள் ஈரானிடம் இருக்க முடியாது என்று அவர் வலியுறுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |