ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச தங்க முதலீட்டாளர்கள்
உலக சந்தையில் இன்று (21) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வார இறுதியில் ஈரான் அமெரிக்க மீண்டும் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமா என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதால் இவ்வாறு விலை குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேவேளை டொலரின் பெறுமதி சற்றே வலுப்பெற்றதாலும் இந்த அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க டொலர்
இன்றைய நிலவரப்படி, ஸ்பொட் தங்கம் (XAU) ஒரு அவுன்சுக்கு 0.5 சதவீதம் குறைந்து 4,795.51 டொரலாக இருந்தது.
இது, ஏப்ரல் 13க்குப் பிறகு நேற்று குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் குறைவடைந்துள்ளது.

அத்துடன் ஜூன் மாத விநியோகத்திற்கான அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் (GC.1) 0.3 சதவீதம் சரிந்து 4,814 டொலராக இருந்தது.
அமெரிக்க டொலர் சற்றே உயர்ந்துள்ளதால், மற்ற நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க டொலர் மதிப்பில் உள்ள பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை சுமார் 8 சதவீதம் சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |