போர்க்களத்தில் புதிய உத்திகளை வெளியிட தயார் : ஈரானிடமிருந்து ட்ரம்பிற்கு வெளியான கடும் எச்சரிக்கை
Donald Trump
Iran
Iran-US Conflict
By Jaso
டொனால்ட் ட்ரம்ப், அச்சுறுத்தல்கள் மற்றும் போர்நிறுத்த மீறல்கள் மூலம் ஈரானின் ராஜதந்திரத்திற்கு சேதம் விளைவிப்பதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் குறிப்பிட்டார்.
அவர் தனது x கணக்கில் ஒரு பதிவில் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகளால் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அழுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை
இருப்பினும், அழுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று சபாநாயகர் எச்சரித்தார்.

பேச்சுவார்த்தை மேசையை சரணடைவதற்கான மேசையாக மாற்ற வோஷிங்டன் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
பதற்றம் மேலும் அதிகரித்தால், போர்க்களத்தில் புதிய உத்திகளை வெளியிட ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி