அமெரிக்காவின் இயலாமை அம்பலம்! ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானின் விமர்சனம்
ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டு வரும் தகவல்கள் பரஸ்பரம் முரணாக இருப்பதாகவும் இது அவர்களின் விரக்தி மற்றும் இயலாமையின் அறிகுறி என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமர்சனத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் முன்வைத்துள்ளார்.
அமெரிக்கத் தரப்பிலிருந்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளால் ஈரான் ஒருபோதும் ஈர்க்கப்படவோ அல்லது பாதிக்கப்படவோ போவதில்லை என்று தெரிவித்த அவர் அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகள் எப்போதும் போலப் பொய்கள் மற்றும் முரண்பாடுகள் நிறைந்தவை என்று சாடியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகள் ஹார்முஸ் நீரிணையின் நிலைப்பாடு குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களைப் பகிர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய பாகேய், ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதோ அல்லது மூடுவதோ சமூக வலைதளங்களில் நடப்பதில்லை அது களத்தில் மட்டுமே நடக்கிறது" என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், அமெரிக்காவின் இராஜதந்திர அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது என்பதையும் நீர்வழிப் பாதையின் கட்டுப்பாடு தங்களது கைவசமே உள்ளது என்பதையும் அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்