பூஜ்ஜிய - கூட்டு ஆட்டத்தில் தோற்கபோகும் ஈரான்! அமெரிக்கா சூளுரை
வளைகுடாப் பகுதியில் ஈரானின் தற்போதைய உத்தி பொருளாதார மற்றும் நிதிச் செலவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், எந்தவொரு விரோத நடவடிக்கைகளுக்கும் ஈரானின் சொத்துக்கள் மீது தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீஈரானிய ஆட்சி தான் விளையாடி வரும் இந்த பூஜ்ஜிய-தொகை ஆட்டத்தில் தோற்றுவிடும்," என்று அவர் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
வளைகுடாவில் உள்ள தமது நட்பு நாடுகளுக்கு அது ஏற்படுத்தும் எந்தவொரு சேதத்திற்கும், ஈரானிய வங்கிக் கணக்குகளிலிருந்து எடுக்கப்படும் நிதியைக் கொண்டு ஈடு செய்யப்படும், என்று பெசென்ட் மேலும் கூறியுள்ளார்.
சுங்கக் கட்டணம்
பாரசீக வளைகுடா நீரிணை ஆணையத்திற்குச் செலுத்தப்படும் எந்தவொரு சுங்கக் கட்டணமும், அவர்களுடைய கணக்குகளிலிருந்து எடுக்கப்படும் நிதிகளைக் கொண்டு ஈடுசெய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

போர் தொடர்பான சேதங்களுக்காக நட்பு நாடுகளுக்கு இழப்பீடு வழங்க, முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் என்ற செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள் இழப்பீடு கோரும் நிலையில் இல்ல என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தமைக்கு பெசென்ட் இவ்வாறு பதில் வழங்கியள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |