வங்கதேசத்தில் மீட்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

By Dhilak Jul 26, 2026 07:31 PM GMT
Report

கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களையும் தந்தையையும் மகனையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மீன்பிடி, நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடியாக தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் 19 ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த 'சோமிரச' படகிலிருந்த எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகனான எஸ். எச். சமிந்த ஆகியோரே இவ்வாறு பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு வழிமாறி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மீன்பிடிப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் வேறு படகொன்றின் மூலம் கரைக்கு வந்து சேர்ந்துள்ளார். 

ஹோர்முஸ் நீரிணையில் ஆறு கப்பல்களை தடுத்து நிறுத்திய ஈரானின் புரட்சிகர படை

ஹோர்முஸ் நீரிணையில் ஆறு கப்பல்களை தடுத்து நிறுத்திய ஈரானின் புரட்சிகர படை

தூதரகங்களுக்கு அறிவிப்பு

எனினும், படகின் உரிமையாளரான பியசேனவும் அவரது மகன் சமிந்தவும் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்துள்ளனர். 

வங்கதேசத்தில் மீட்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை | Steps Taken To Bring Back Two Fishermen

Image Credit: Vecteezy

படகில் படகு கண்காணிப்பு அமைப்போ (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலி இயந்திரமோ இல்லாதிருந்தமையால், அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிவது கடினமாகியிருந்தது. 

அவர்களைக் கண்டறிவதற்காகக் கடற்படையும் விமானப்படையும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை. 

இருப்பினும், நிலவும் கடல் நீரோட்டங்களுக்கு ஏற்பப் படகு தொலைதூரப் பகுதிக்கு மிதந்து செல்லக்கூடும் என மீன்பிடித் திணைக்களம் கணித்ததன் அடிப்படையில், வெளிநாட்டுத் தூதரகங்களுக்குப் அறியத்தரப்பட்டிருந்தது. 

பங்களாதேஷில் மீட்பு 

அதற்கமைய, குறித்த படகு பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு அடித்துச் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பங்களாதேஷ் மீனவர்கள் குழுவொன்றினால் அதிலிருந்த தந்தையும் மகனும் மீட்கப்பட்டுள்ளனர். 

வங்கதேசத்தில் மீட்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை | Steps Taken To Bring Back Two Fishermen

சுமார் ஒரு நாள் வரை பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவர்கள், தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்தி கிடைத்தவுடன் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்துள்ளார்.

பொகவந்தலாவையில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

பொகவந்தலாவையில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

இரு பெண்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற OIC அதிரடி கைது!

இரு பெண்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற OIC அதிரடி கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026