ஈரானிய கொதிநிலைக்குள் இலங்கையில் அமெரிக்காவின் மொன்டானா படையணி ஏன்....
ஈரான் மீதான ஒரு பெரும் தாக்குதலுக்குரிய அமெரிக்காவின் முன்னெடுப்புகள் பரபரப்பாக இருப்பதை மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத்தளங்களுக்கு இராணுவ தளபாடங்களை இறக்கும் அயராத வேலைகளில் அதன் சரக்கு விமானங்கள் இடையறாது ஈடுபடும் காட்சிகள் புலப்படுத்துகின்றன.
ஏற்கனவே அரேபிய கடலின் வடபிரந்திரயத்தில் ஆபிரகாம் லிங்கன் விமானந்தாங்கி தலைமையிலான மெகா தாக்குதல் அணியானது சுப்பர் ஹோர் னெத், எப்-35 மின்னல் II, தாக்கும் கழுகு (ஸ்ட்ரைக் ஈகிள்) உட்பட்ட போர் விமானங்களின் படைப்பிரிவுகள் உள்ளன.
இந்த பெரும் ஆர்மடாவுக்கு அப்பால் ஈரானை விட்டோமா பார் என டெல்பேர்ட் பிளாக், மெக் போல் மற்றும் மிட்சர் ஆகிய மூன்று நாசகாரிகடற்கலங்கள் தொமாஹாக் ஏவுகணைகள் உட்பட்ட ஏவுகணைகளுடன் நிற்கின்றன.
அதேபோல பஹ்ரைன் கடற்பரப்பில் சான்ரா பார்பரா, கன்பெர்ரா மற்றும் துல்சா ஆகிய மூன்று போர் கப்பல்களும் தயாராக உள்ளன. இதற்கும் அப்பால் ஈரான் ஏவும் ஏவுகணைகளை தடுக்க கத்தாரில் உள்ள அல் உதெய்ட் விமான தளத்தில் புதிய பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் நிறுத்தப்பட்டுள்ன.
இதனைவிட அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்த பிராந்தியத்தில் இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் குறித்து பென்ரகன் இரகசியம் காத்துவருகிறது.
இதே சமகாலத்தில் மத்தியகிழக்கில் பறக்கும் தமது விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப் பயன்படுத்தப்படும் எட்டு எரிபொருள் தாங்கி விமானங்கள் ஸ்பெயினில் உள்ள மோரோன் விமான தளத்தில் தரையிறங்கின.
இதேபோல ஆறு F-35 விமானங்கள் போர்த்துக்கலின் லாஜஸ் விமான தளத்தில் தரையிறங்கியுள்ளன. எல்லாவற்றும் மேலாக ஈரானிய வளிமண்டலத்தில் கதிரியக்கதை கண்டறியும் WC-135R கொன்ஸ்டன்ட் பீனிக்ஸ், வான்கலம் பிரித்தானியாவில் தரையிறங்கி மத்திய கிழக்குக்கு பறந்துள்ளது.
இவ்வாறாக போர் ஆயத்தங்கள் இருந்தாலும் அமெரிக்காவுடன் பேச்சுக்களுக்கு ஈரான் தயாராக உள்ளதாக ஈரானின் புதிய ஒலிவ் கிளைவந்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கனா கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள இலங்கையில் அமெரிக்காவின் மொன்டானா தேசிய படையணி இறங்கியுள்ள பின்னணியில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்