தனது எதிர்கால செயற்பாட்டை திட்டவட்டமாக அறிவித்தார் விஜய்
அரசியல்தான் தனது எதிர்காலம் எனவும் அது தனது நீண்ட கால பயணம் எனவும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் அதன் தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது,
திடீரென எடுத்த முடிவு அல்ல
அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல. வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன்.

33 ஆண்டு கால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல. கொரோனா காலத்திற்கு பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்தேன். அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல. அரசியல்தான் எனது எதிர்காலம். எனது அரசியல் பயணம் நீண்ட கால பயணம்.வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன்.
கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சி
கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.

எல்லாவற்றிற்கும் நான் உடனடியாக எதிர்விணை ஆற்றுவதில்லை. நான் என்ன அனுபவித்தேன் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்