ஹோர்முஸ் நீரிணை : ஈரானிலிருந்து வெளியான கடும் எச்சரிக்கை
ஈரானை தாக்க ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்த எந்த நாடும் அனுமதிக்கப்படாது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பஹாய் தெரிவித்துளள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்பகுதியில் உறுதியற்ற தன்மையை உருவாக்கியுள்ளதால், இந்த கடல் பாதை வழியாக கப்பல் போக்குவரத்து தற்போது சிறப்பு நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிய ஆயுதப்படைகளின் வசம் உள்ளது என்றும், ஒரு கடலோர நாடாக ஈரான் தனது தேசிய பாதுகாப்பிற்கு தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பின்மைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் காரணம்
வரலாற்று ரீதியாக இந்த கடல் பாதையின் பாதுகாவலராக ஈரான் இருந்து வந்தாலும், தற்போதைய பாதுகாப்பின்மைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த கடல் பாதையை தாக்கும் நாடுகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் கடுமையாகக் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்