வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களுக்கு அல்லது சிறுவர்களின் உயிரிழப்புகளுக்குத் துணைபுரியும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மையங்களுக்கு நிதி, நிலம், மின்சாரம் உள்ளிட்ட எந்தவொரு வளங்களையும் வழங்க வேண்டாம் எனப் பிராந்திய வளைகுடா நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகர் மொஹம்மத் பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் விரைவில் பெர்சிய வளைகுடா தரவு அதிகாரசபை உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அரசாங்கங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள், முதலீட்டு நிதியங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்குக் கனிவான வேண்டுகோள், ஆக்கிரமிப்புகளுக்கும் சிறுவர்களின் கொலைகளுக்கும் உதவும் எந்தவொரு AI அல்லது தரவு நிறுவனங்களுக்கும் எவ்வித வளங்களையும் வழங்க வேண்டாம்.
இத்தகைய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிதி, பங்குகள் (Equity), நிலம் மற்றும் ஆற்றல்/மின்சாரம் (Energy) போன்ற எதனையும் வழங்கக் கூடாது.

பிராந்திய கடல்சார் மற்றும் தொழில்நுட்பத் தரவுகளைக் கண்காணிக்க பெர்சிய வளைகுடா தரவு அதிகாரசபை எனும் புதிய அமைப்பு விரைவில் களமிறங்கும்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை அல்லது உளவுப் பணிகளுக்கு உதவும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மற்றும் தரப்பினர் ஈரானின் நேரடி சட்ட மற்றும் இராணுவ அமலாக்க நடவடிக்கைகளை (Enforcement) எதிர்கொள்ள நேரிடும்” என அவர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |