போக்கை மாற்றாவிட்டால் போர் விரைவில் முடிவுக்கு வரும்! ஈரானுக்கு ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை
ஈரானின் இராணுவ மற்றும் பொருளாதாரத் திறன்கள் முறைப்படியாக அழிக்கப்பட்டு விட்டன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஈரான் தனது போக்கைக் குறுகிய காலத்தில் மாற்றிக் கொள்ளாவிட்டால் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலில் வரும் அக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்குத் தனது முழுமையான ஆதரவை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நிதி ஆதாரம்
இது குறித்து சமூக வலைதளப் பதிவொன்றின் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ட்ரம்ப் இக் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரானிய ஆட்சி தன் இராணுவ அணுகுமுறையையும் கொள்கைகளையும் விரைவாக மாற்றத் தவறினால் எஞ்சியுள்ள நடவடிக்கைகளையும் எடுத்துப் போரை அமெரிக்கா விரைவில் முடித்து வைக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் மற்றும் சர்வதேசத் தடைகள் காரணமாக ஈரானின் நிதி ஆதாரம் மற்றும் போர் நடத்தும் திறன் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் உரிமை கோரியுள்ளார்.
நெதன்யாகுவை தீரமிக்க மற்றும் சிறந்த போர்வீரர் எனப் புகழ்ந்துள்ள ட்ரம்ப், ஈரானிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வலுவான தலைவராக அவரே இருக்கிறார் எனக் குறிப்பிட்டு முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தவறான ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தால் இந்த இராணுவப் பணிகளை அமெரிக்காவே நேரடியாகச் செய்ய வேண்டி வரும் ஆனால் அதனைச் செய்ய நான் விரும்பவில்லை" என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |