அமெரிக்காவிற்கு வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலீபாஃப் (Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடி இனி விகிதாசாரமாக (Proportionate) இருக்காது என்பதை அவர் வலியுருத்தியுள்ளார்.
யாழ் நகரின் நுழைவுப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா நல்லூர் பிரதேசசபை....
சமமான பதிலடி
அத்தோடு சமமான பதிலடிகளைக் கொடுக்கும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அமெரிக்கர்கள் நிச்சயமாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “ஆக்கிரமிப்பாளர்களின் தளங்களுக்கு எதிராக நாங்கள் சமீபத்தில் நடத்திய நடவடிக்கைகள் ஒரு தொடக்கமே.

அவர்கள் இன்னும் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் ஆட்டத்தின் விதிகள் மாறிவிட்டன என்பதை காலம் கடப்பதற்குள் புரிந்துகொள்ள வேண்டும்.
இராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் அமெரிக்காவை ஈரான் எதிர்கொண்டது போல அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சாரத்தையும் ஈரான் முறியடித்து வெற்றிபெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |