கண்ணாடியில் தெரிந்த ஏவுகணை! ஈரானிடம் நூலிழையில் தப்பிய அமெரிக்காவின் Super Hornet
ஈரானின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் F/A-18 Super Hornet போர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 மார்ச் 25ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது பரவி வருகிறது.
தரையில் இருந்து பதிவு செய்யப்பட்டதாகத் தோன்றும் காணொளியில், அமெரிக்க போர் விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கும்போது, கீழ்புறத்திலிருந்து ஏவுகணை ஒன்று பாய்ந்து வருவது காணப்படுகிறது.
வேகமாகப் பரவிய செய்தி
ஏவுகணை விமானத்தை நெருங்கிய நிலையில், விமானி திடீரென இடதுபுறமாகத் திரும்பியதாகவும், சில நொடிகளில் விமானத்தின் பின்புறத்தில் ஏவுகணை வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விமானம் தொடர்ந்து பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஊடகம், அமெரிக்க F/A-18 விமானம் புதிய மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பால் துல்லியமாகத் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகவும் அறிவித்தது.
இந்தத் தகவல் மத்திய கிழக்கு ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
எனினும், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இந்தக் கூற்றை உடனடியாக மறுத்தது.
தவறான IRGC-யின் கூற்று
மேலும், ஈரானால் எந்த அமெரிக்க போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என CENTCOM தெரிவித்தது.
திறந்த மூலத் தகவல் ஆய்வாளர்கள் காணொளியை ஆய்வு செய்து, அது சாபஹார் துறைமுகப் பகுதியில் பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
காணொளியின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏவுகணை விமானத்தை நேரடியாகத் தாக்கவில்லை என்றும், விமானத்தின் பின்புறத்தில் வெடித்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான IRGC-யின் கூற்று தவறானது எனக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21