கார்க் தீவு எல்லையை அதிரவைத்த அமெரிக்க ஏவுகணைகள்! உரிமை கோருகிறது CENTCOM
ஈரானை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் பதிலடி தாக்குதலின் ஒரு பகுதியாக, மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்ததாக CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த பதிலடித் தாக்குதல்களில், இரண்டு கப்பல்களை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்ததாகவும் மற்றொன்றை முற்றிலுமாக அழித்ததாகவும் CENTCOM தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த தாக்குதல் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இரு தரப்பும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.
அதிர்ந்த கார்க் தீவு எல்லை
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக CENTCOM அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி நிரந்தரமாகச் செயலிழந்த அந்த இரண்டு கப்பல்களும் ஈரான் நாட்டுக் கொடியைக் கொண்டவை. மேலும், அவை 2004-இல் கட்டப்பட்ட VLCC டவுனி மற்றும் 2000-இல் கட்டப்பட்ட சூயஸ்மாக்ஸ் ஸ்டார்க் 1 ஆகும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தேசிய ஈரானிய டேங்கர் நிறுவனத்திற்கு (NITC) சொந்தமானவை எனவும் கூறப்பட்டுள்ளது.
அரேபிய வளைகுடாவின் வடக்கே உள்ள கார்க் தீவுக்கு அருகே நங்கூரமிட்டிருந்த இடத்தில் டவுனி என்ற கப்பல் தாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் எச்சரிக்கை
நான்கு ஏவுகணைகள் கப்பல்களைத் தாக்கியதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய அறிக்கைகள் கூறுகின்றன.
“Let the message to the IRGC be clear: If you shoot at two of our ships, we will impose an even higher economic cost —taking out three of yours. We will not hesitate to defend American forces, and if necessary, destroy Iran’s limited and exposed oil fleet.” — Adm. Brad Cooper,… pic.twitter.com/UGGcSGsUtd
— U.S. Central Command (@CENTCOM) September 5, 2026
ஸ்டார்க் 1 கப்பல், ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஜாஸ்க் அருகே தாக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், ஸ்டார்க் 1 கப்பலின் பின்பகுதி தாக்கப்படுவதற்கு முன்பு, கப்பலைக் கைவிடுமாறு அதன் குழுவினருக்கு மூன்று நிமிடங்கள் அவகாசம் அளித்து, அமெரிக்கப் படைகள் எச்சரிக்கை விடுப்பது காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |